முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு : தமிழகத்திற்கு ரூ.5,797 கோடி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களுக்கான ரூ.1.42 லட்சம் கோடி வரி பகிர்வு நிதியை மத்திய அரசு விடுவித்து உள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.5,797 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான 3-வது தவணை நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.  

அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.5,797 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசத்துக்கு ரூ.25,495 கோடியும், பீகாருக்கு 14,295 கோடியும், மத்திய பிரதேசக்கு ரூ.11,157 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.10,692 கோடியும், மகராஷ்டிராவிற்கு ரூ. 8,978 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.8,564 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.6,435 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு ரூ.5,797 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.5,752 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ 5,183 கோடியும், குஜராத்துக்கு ரூ.4,943 கோடியும், சத்தீஷ்கருக்கு ரூ.4,842 கோடியும், ஜார்கண்டிற்கு ரூ.4,700 கோடியும், அசாமிற்கு ரூ.4,446 கோடியும், தெலுங்கானாவிற்கு ரூ.2,987 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு ரூ.2,736 கோடியும், பஞ்சாப் ரூ.2,568 கோடியும், அருணாசல பிரதேசத்திற்கு ரூ.2,497 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.1,589 கோடியும், அரியானாவுக்கு ரூ. 1,553 கோடியும், இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,180 கோடியும், மேகாலயாவுக்கு ரூ.1,090 கோடியும், மணிப்பூருக்கு ரூ.1018 கோடியும், திரிபுராவுக்கு ரூ.1,006 கோடியும், நாகலாந்துக்கு ரூ.809 கோடியும், மிசோரமுக்கு ரூ.711 கோடியும், சிக்கிமிற்கு ரூ.551 கோடியும், கோவாவுக்கு ரூ.549 கோடி என மொத்தம் ரூ.1,42,122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பிப்ரவரி மாதம்  12-ம் தேதி மாநிலங்களுக்கு ரூ.72,961 கோடி வரிப்பகிர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 29-ம் தேதி அன்று 3-வது தவணை யாக கூடுதலாக ரூ.1,42,122 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து