முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரும்பப் பெறப்படாத ரூ. 2 ஆயிரம் நோட்டுகளின் மதிப்பு ரு.8,470 கோடி : ரிசர்வ் வங்கி தகவல்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      இந்தியா
RBI- 2023-04-06

Source: provided

புதுடெல்லி : 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 97.62 சதவீதம் திரும்ப பெறப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, ரூ.8,470 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2023 மே 19-ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் வணிகம் முடிவடையும்போது மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2024 பிப்ரவரி 29-ம் தேதி வணிகம் முடிவடையும்போது புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.8,470 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 97.62 சதவீதம் திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும், இன்னும் சுமார் 8,470 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து