முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

71-வது பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      இந்தியா
Modi CM 2023 04 05

புதுடெல்லி, முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு  அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 71-வது பிறந்தநாளை  கொண்டாடினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் முதல்வர்  மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு, உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகள்  என தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஜனாதிபதி திரெளபதி முர்முவும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி  உள்பட கூட்டணி கட்சித்தலைவர்களும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், நடிகர் கமல்ஹாசன், புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த், த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து