முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

71-வது பிறந்தநாள்: தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
CM-1 2024-03-01

Source: provided

சென்னை : தன்னுடைய 71வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களை சந்தித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடினர். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்டம்தோறும் முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை திமுக மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து