முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: சந்தேக நபரின் சி.சி.டி.வி காட்சி வெளியீடு: 4 பேரிடம் விசாரணை

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      இந்தியா
Bang 2024-03-01

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கபேவில் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் இருவர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் என‌ தெரியவந்துள்ளது. மொத்தம் 10 பேர் காயமடைந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவர்கள் ஒயிட் பீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. நேற்று காலை முதல் தேசிய பாதுகாப்புப் படையினர்   நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ராமேஸ்வரம் கபேவில் வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் அடங்கிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது. தொப்பி, கண்ணாடி, பேண்ட், சட்டை என நேர்த்தியாக ஆடை அணிந்து கையில் பையுடன் அந்த நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. 

உணவகத்துக்குள் உள்ள சி.சி.டி.வி. காட்சியில் அதே நபர் கைப்பையை அங்கே வைத்து விட்டு வெளியேறுவதும் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. அந்த நபர் உணவகத்தில் பையை வைத்து விட்டுச் சென்ற சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. 

இதனால் அவரைக் கண்டறிய தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி நடந்த நிலையில் அந்த நபரை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் அந்த நபர் உடுப்பியில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் உடுப்பி, மங்களூரு பகுதிகளுக்கும் தனிப்படை போலீசார் சென்றுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து