முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.-த.மா.காவின் முதல் சந்திப்பே ஆக்கபூர்வமாக இருந்தது: ஜி.கே.வாசன்

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      தமிழகம்
GK-Vasan

Source: provided

சென்னை : பா.ஜ.க. - த.மா.கா. இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் த.மா.கா. இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் போன்றோர் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. வாசன் கூறியதாவது, 

பா.ஜ.க. - த.மா.கா. இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல், களப்பணி, வெற்றி வியூகம் தொடர்பாக இந்த சந்திப்பில் பேசினோம். த.மா.கா. தேர்தல் குழு அமைத்தபின் முறைப்படி தொகுதி எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படும்.

வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை த.மா.கா. விருப்ப மனு பெறவிருக்கிறது. அதன்பின் பா.ஜ.க. குழு த.மா.கா. உடன் பேச்சுவார்த்தையை தொடங்கும். நாட்டு நலன் கருதி மத்தியில் நல்லாட்சி அமைய தேசப்பற்றோடு கூடிய கட்சிகள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று த.மா.கா. கேட்டுக்கொள்கிறது. 

மாநில கட்சிகள் நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சியாக செயல்படக்கூடிய முக்கிய தருணம் இது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட்டு நல்ல முடிவை நாட்டு நலன் கருதி எடுக்க வேண்டும்.

இண்டியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது. அந்த கூட்டணியின் கருத்து வேறுபாடும், திறனற்ற செயல்பாடும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை குறைத்துக் கொண்டு போகிறது என்று தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்து ஜி.கே.வாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பா.ஜ.க, த.மா.கா இடையே சுமூகமாக பேச்சுவார்த்தை தொடர்கிறது. வரும் 4-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து