எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வரும் மக்களவை தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளன. தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன், மமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மமக செயல்படும் எனவும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மேலும், இந்த தேர்தலில் மமகவுக்கு 1 தொகுதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


