முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலியோ இல்லா சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள்: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : போலியோ இல்லாத சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில்  உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெற்றது. இதில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், போலியோ இல்லாத சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

போலியோ இல்லாச் சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும். நலமான குழந்தைகளே எதிர்காலத்திற்கான ஒளி. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து