எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பா.ஜ.க. எம்பியும் மத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் மருத்துவர் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 30 ஆண்டுகால தனது அரசியல் பயணத்தை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அனைத்து கட்சித் தொண்டர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ்வர்தன் தற்போது எம்பியாக உள்ள டெல்லி சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்பவரை வேட்பாளராக பா.ஜ.க. நேற்று முன்தினம் அறிவித்தது. முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. டெல்லி எம்.பி.யுமான கௌதம் கம்பீர், அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு டெல்லியைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. அரசியலில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மக்களவை தோ்தலையொட்டி, பா.ஜ.க.வின் முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும் 34 மத்திய அமைச்சா்களின் பெயா்களும் முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், கேரளம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 195 தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


