எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பாரதம் விழிப்படைந்து பொருளாதார, கலாச்சாரம் வழிகளில் முன்னேறி வருகிறது என்று தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அய்யா வைகுண்டரின் 192வது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டு விழா சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நூலினை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டு உரையாற்றினார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
அய்யா வைகுண்டர் நாரயணின் அவதாரம். வைகுண்டர் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டத்தை எண்ணி பார்க்க வேண்டும். சனாதன தர்மத்திற்கு ஊறு ஏற்படும் போது கடவுள் நாரயணன் பல அவதாரமெடுக்கிறார். அப்படியான அவதாரமே வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார்.
ஐரோப்பிவிற்குள் நுழைவதற்கு முன்பே இந்தியாவிற்குள் கிறித்துவம் வந்துவிட்டது. வெளியில் இருந்து வந்த சிலர், அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அழித்தார்கள். கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட இலக்கு மதமாற்றம் செய்வதே. 1757ல் பெங்கால் மாகாணத்தை கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியது.
பாரதம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக திகழ்ந்தது. மக்கள் சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். இந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவை அடிமைப்படுத்த சவாலாக இருந்தது. இந்தியாவை அடிமையாக்க சனாதன தர்மத்தை அழிக்க பிரிட்டிஷ் முடிவெடுத்தது. இந்தியாவை ஆள்வதற்கு கிறிஸ்தவ மதமாற்றத்தை கொள்கையை பிரிட்டிஷ் அரசு கையில் எடுத்தது.
பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் 1813 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் மக்களை கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு உட்படுத்தினர். கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது. இன்று பாரதம் விழிப்படைந்து பொருளாதார, கலாச்சாரம் வழிகளில் முன்னேறி வருகிறது. இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


