எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது. லக்னோ நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவரில் 199 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து 200 ரன்களை துரத்திய பஞ்சாப் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான்- ஜானி பேர்ஸ்டோ 102 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
அதனால் பஞ்சாப் அணியே வெற்றிபெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த சமயத்தில் 145 - 155 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி அவர்களுடைய விக்கெட்டுகளை எடுத்த லக்னோ அணியின் அறிமுக வீரர் மயங் யாதவ் 4 ஓவரில் வெறும் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அந்த வகையில் இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த மயங் யாதவ் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அசத்தவேன் என்று எதிர்பார்க்கவில்லை என மயங் யாதவ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- \"இப்படி ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. போட்டிக்கு முன் பதற்றமாக இருந்தது. இருப்பினும் என்னுடைய வேகத்தில் சரியாக ஸ்டம்ப்களை குறி வைக்க முயற்சித்தேன். ஆரம்பத்தில் மெதுவான பந்துகளை பயன்படுத்துவதை பற்றி யோசித்தேன். ஆனால் வேகமான பந்துகளையே பின்பற்றினேன். முதல் விக்கெட் (பேர்ஸ்டோ) சிறப்பானது. இளம் வயதிலேயே அறிமுகமானது நல்லது. எனக்கு சில இலக்குகள் உள்ளன\" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


