முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 300 விக்கெட்: எம்.எஸ்.டோனி புதிய சாதனை

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2024      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

விசாகப்பட்டினம் : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 13வது ஐபிஎல் போட்டியில் பிரித்வி ஷாவின் கேட்ச் பிடித்ததன் மூலமாக விக்கெட் கீப்பராக டோனி 300 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

முதலிடத்தில்...

ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி இதில் களமிறங்கியது. சென்னை அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்தது. அதேநேரம், டெல்லி அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் நீடித்தது.

191 ரன்கள் சேர்ப்பு...

இந்நிலையில் போட்டிக்கான டாஸை வென்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த தொடரில், ரவீந்திர ஜடேஜாவின் 10.4ஆவது ஓவரின் போது பிரித்வி ஷா கொடுத்த கேட்சை டோனி பிடித்து புதிய சாதனை படைத்தார். 

300 பேட்ஸ்மேன்கள்...

டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 300 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் மஹேந்திர சிங் டோனி. டோனியைத் தொடர்ந்து பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் (274), இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (274), தென் ஆப்பிரிக்காவின் குயீண்ட டி காக் (270), இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (209) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

டோனி புதிய மைல்கல் (டி-20)

1) எம்.எஸ்.டோனி - 300 விக்கெட்கள்.

2) கம்ரான் அக்மல் - 274 விக்கெட்கள்.

3) தினேஷ் கார்த்திக்  - 274 விக்கெட்கள்.

4) குயீண்ட் டி காக்  - 270 விக்கெட்கள்.

5) ஜோஸ் பட்லர் - 209 விக்கெட்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து