முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணம் நிச்சயம் குறித்து மந்தனா

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      விளையாட்டு
Smriti-Mandhana 2024-08-21

Source: provided

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார். மராட்டியத்தை சேர்ந்த 29 வயதான மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா வருகிற 23-ந்தேதி அவரை கரம் பிடிக்க உள்ளார். 

இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள், வீராங்களைகள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்மிர்தி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணம் நிச்சயமானதை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ் ஆகியோருடன் நடனமாடுவது போன்ற விடியோவை வெளியிட்டுள்ளார். 

____________________________________________________________________________________

தென்னாப்பிரிக்க வீரர் விலகல்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் இன்று (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ககிசோ ரபாடா, காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ககிசோ ரபாடா விலகுகிறார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஆடுகளத்தைக் காட்டிலும் குவாஹாட்டி ஆடுகளம் நன்றாக காணப்படுகிறது. ரபாடாவுக்குப் பதிலாக மாற்று வீரரை நாளை காலையில் நிலவும் சூழலைக் கொண்டு முடிவு செய்வோம் என்றார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________

டெஸ்ட் போட்டியில் நிலநடுக்கம்

வங்க தேசத்தில் நேற்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் தாக்கம் வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் எதிரொலித்தது. இதனால் ஆட்டம் 3 நிமிடம் தடைபட்டது. அனைத்து வீரர்களுகளும் தரையில் அமர்ந்து கொண்டனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் மைதானத்தை விட்டு வெளியேறினர். அயர்லாந்து அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது

____________________________________________________________________________________

காம்பீருக்கு ரகானே எதிர்ப்பு

உள்ளூர் கிரிக்கெட்டில் கூட சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்படுவதில்லை என்று இந்திய முன்னணி வீரர் ரகானே தெரிவித்துள்ளார். அதனால் பயிற்சியில் கூட அப்படிப்பட்ட பிட்ச்சில் பயிற்சிகளை எடுக்காத இந்திய வீரர்களை தோல்விக்கு காரணமாக சொல்லாதீர்கள் என்று காம்பீரை அவர் சாடியுள்ளார்.  இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “டெஸ்ட் போட்டிகளில் நாம் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை உருவாக்குகிறோம். உங்களிடம் தரமான ஸ்பின்னர்கள் இருந்தால் நீங்கள் அதை செய்யலாம். ஆனால் அதில் பந்து எப்போது சுழல தொடங்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை முதல் நாளிலேயே பந்து சுழலுவதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் அதே மாதிரியான பிட்ச்கள் இருக்க வேண்டும்.

ஏனெனில் உங்கள் வீரர்கள் அத்தகைய பிட்ச்களில் விளையாடப் போகிறார்கள் என்றால், அதே அனுபவம் அவர்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கிடைக்க வேண்டும். உள்நாட்டில் நாம் பொதுவாக பிளாட் அல்லது வேக பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாடுகிறோம். ஆனால் அது பொதுவாக 3-வது நாளிலிருந்துதான் தொடங்கும். முதல் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்ய சிறந்ததாக இருக்கும். சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாட நீங்கள் வித்தியாசமாக தயாராக வேண்டும். இங்கே வீரர்களை நாம் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். அவர்கள் இப்படிப் பட்ட பிட்ச்களில் விளையாடியதில்லை. பயிற்சியின்போது கூட அவர்கள் அத்தகைய பிட்ச்களில் பயிற்சி எடுப்பதில்லை” என்று கூறினார். 

____________________________________________________________________________________

லக்‌ஷயா அரையிறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர்களான லக்‌ஷயா சென் - ஆயுஷ் ஷெட்டி நேருக்கு நேர் மோதினர். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்‌ஷயா சென் 23-21 மற்றும் 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து