முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 100 ஆண்டுகளில் புதிய சாதனை: ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி : முதல் நாளில் 19 விக்கெட்டுகள்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

பெர்த் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இங்கி., பேட்டிங்....

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்று (நவம்பர் 21) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மிட்செல் ஸ்டார்க்.... 

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 61 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆலி போப் 46 ரன்களும், ஜேமி ஸ்மித் 33 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, பிரண்டன் டக்கெட் 2 விக்கெட்டுகளும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

9 விக்கெட்டுகளை... 

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்களும், கேமரூன் கிரீன் 24 ரன்களும் எடுத்தனர். டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரைடான் கார்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 49 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

19 விக்கெட்டுகள்... 

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தனித்துவமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முதல் நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. 

முதல் நாளில் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டுகள்:

1) பெர்த் திடல் (2025) - 19 விக்கெட்டுகள் (இங்கிலாந்து - 10, ஆஸ்திரேலியா - 9).

2) டிரெண்ட் பிரிட்ஜ் (2001) - 17 விக்கெட்டுகள் (இங்கிலாந்து - 10, ஆஸ்திரேலியா - 7).

3) லார்ட்ஸ் (2005) - 17 விக்கெட்டுகள் (ஆஸ்திரேலியா - 10, இங்கிலாந்து - 7).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து