முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி கோட் லைப் - ஆடுஜீவிதம்’ விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
The-Code-Life 2024-04-02

Source: provided

 அரபு நாட்டுக்கு சென்று கொஞ்சமாக பணம் சம்பாதித்து வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில், வளமான தனது கிராமம் மற்றும் கர்ப்பமாக இருக்கும் மனைவியை விட்டுவிட்டு சவுதிக்கு செல்கிறார் நாயகன் பிருத்விராஜ். சவுதியில் இறங்கியதும் தன்னை அழைத்துச் செல்ல வேண்டிய ஏஜெண்ட் வராததால், தவறான ஏஜெண்ட் உடன் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணியில் அமர்த்தப்படுகிறார்.

புரியாத மொழி, எதிர்பார்க்காத வேலை என்று தடுமாறும் பிரித்விராஜ், சில நாட்கள் கழித்தே தான் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் அடிமையாக்கப்பட்டதை அறிந்துக்கொள்கிறார். பிறகு அந்த வேலைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்பவர் திடீரென்று ஒரு நாள் தனது முகத்தை கண்ணாடியில் பார்த்து பதறிப்போகிறார். தான் இங்கே வந்து பல வருடங்கள் ஆனதை உணர்பவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிய, இது தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்துக்கொண்டு வாழ்பவருக்கு மீண்டும் தப்பிப்பதற்காக ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இந்த முறை எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவில் பாலைவனத்தை கடக்க முயற்சிக்கிறார். மரணத்தோடு போரடிக்கொண்டு பாலைவனத்தில் பயணப்படும் பிரித்விராஜ், தப்பித்தாரா? இல்லையா? என்பதை ஒரு மனிதனின் வாழ்க்கை போராட்டமாக சொல்வதே ‘தி கோட் லைப் - ஆடுஜீவிதம்’.

பிரித்விராஜின் வாழ்க்கை போராட்டம், மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் அமைந்திருப்பதோடு, பிரித்விராஜின் கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப ரீதியாக காட்சிகளை கையாண்ட விதம் போன்றவற்றின் மூலம் ஒரு திரைப்படமாக ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குநர் பிளஸ்ஸி

மொத்தத்தில், இந்த ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’கண்களையும் நெஞ்சங்களையும் குளிரச் செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து