முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேற்று இந்த நேரம் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
This-time-yesterday 2024-04

Source: provided

கதை நாயகன் ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் அவர்களது நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் சில மோதல்கள் ஏற்படுகிறது. அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார். அதுபற்றி போலீசில் புகார் அளிக்க, போலீஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார். மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா?, அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘நேற்று இந்த நேரம்’.

வில்லத்தனம் கலந்த நாயகன் வேடத்தில் நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன், நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா மற்றும் நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் மற்றும் 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருந்தாலும், படத்தொகுப்பாளர் கோவிந்த், கையில் கத்திரி எடுக்காமல் இயக்குநர் எடுத்த காட்சிகளை அப்படியே தொகுத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், ‘நேற்று இந்த நேரம்’ இன்னும் பயணிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து