முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
Hot-Cold-Rain 2024-04-02

Source: provided

மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், ஊரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் திரவ் - இஸ்மத் பானு தம்பதியின் குழந்தையின்மை பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசுகிறார்கள். ஊரார், உறவினர் என சுற்றியிருப்பவர்களின் இத்தகைய பேச்சுக்களால் கஷ்ட்டப்படும் தம்பதி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி இருவரையும் பரிசோதித்ததில் திரவுக்கு பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது. 

ஆனால், இந்த விசயத்தை கணவரிடம் சொல்லாமல் மறைக்கும் இஸ்மத் பானு, அதே சமயம் குழந்தையின்மை பிரச்சனையால் தனது கணவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார். அந்த முடிவால் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்க, சில வருடங்களில் அந்த குழந்தையாலேயே தம்பதி இடையே பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? என்பதை தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனையை மையமாக கொண்டும், அதற்கான அறிவியல் தீர்வையும், அதை ஏற்றுக்கொள்ள தயங்கும் மக்களுக்கு அறிவுரையாகவும் சொல்வதே ‘வெப்பம் குளிர் மழை

குழந்தையின்மை என்பது தம்பதி அல்லது தனிமனித பிரச்சனை இல்லை, அது ஒரு விளைவு, அது நடக்கும் போது நடக்கும். ஆனால், அதை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றுவது சமூகம் தான், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்துக்கு சிறப்பு வணக்கம்

மொத்தத்தில் வெப்பம் குளிர் மழை அனைவரையும் கண்களில் கண்ணீரால் நனைத்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து