முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

“பொதுநலவாதி” பாடல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
Publicist-song 2024-04-02

Source: provided

அவனியாபுரம் மாசாணம் வழங்கும், ரியாஸ் காதிரி இசையில், அந்தோணிதாசன் குரலில், ஓட்டுக்குப் பணம் பெறுவது எத்தகைய இழிசெயல் என்பதைச் சொல்லும், விழிப்புணர்வு பாடலாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “பொதுநலவாதி”. சமூக நலனுடன் உருவாகியுள்ள இப்பாடலை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் அவனியாபுரம் மாசாணம்.

இப்பாடலின் வெளியீட்டு விழா, பாடலின் படைப்பாளிகள் குழுவினருடன், சமூக செயல்பாட்டாளர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன்  மேடையை அலங்கரிக்கும் மூத்தவர்களுக்கு நாட்டுப்புற கலைஞனாக என் வணக்கம். இரண்டு பேரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிவிழா தான் இது. மாசாணம், ரியாஸ் காரி இருவருடனும் இரண்டு மாதங்களாக இப்பாடலுக்காகச் சேர்ந்து உழைத்துள்ளேன். ரியாஸ் அண்ணன் பெரிய திறமைசாலி, பாடுவார், பாடல் எழுதுவார், மதுரையில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளார்.

திரைத்துறையில் ஜெயிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார் அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். மாசாணம் தன் சொந்தப்பணத்தைப் போட்டு அரசாங்கம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். பாடலும் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது. ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், ஓட்டை மதித்து பயன்படுத்துங்கள், நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து