Idhayam Matrimony

புற்றுநோயால் அவதியுறுவதால் தேர்தலில் போட்டியிடவில்லை: பீகார் முன்னாள் துணை முதல்வர் அறிவிப்பு

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      இந்தியா
Bihar 2024-04-03

பாட்னா, கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் அவதியுறுவதால் இந்த மக்களவை தேர்தலில் என்னால் போட்டியிடவோ, பிரச்சாரத்தில் பங்கேற்கவோ முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவொன்றில், 

கடந்த ஆறு மாதங்களாக நான் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இதனை இப்போது மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணருகிறேன். இந்த மக்களவைத் தேர்தலில் என்னால் எதுவும் செய்ய முடியாது. 

இவை அனைத்தையும் பிரதமரிடம் நான் தெரிவித்து விட்டேன். எப்போதும் நாட்டிற்கும், பீகாருக்கும் கட்சிக்கும் நன்றியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பேன்.  இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

என்றாலும், பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான 27 உறுப்பினர்கள் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் சுஷில் குமார் மோடி சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள பா.ஜ.க. எம்.பி., ரவி சங்கர், மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து