எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடந்து சென்று தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 04-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் சென்று தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று காலை திருவண்ணாமலை தேரடி வீதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று, தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தேரடி வீதியில் உள்ள கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


