முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலகாலம் விமர்சனம்

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2024      சினிமா
Alakalam-review 2024-04-08

Source: provided

குடிப் பழக்கத்தால் கணவனின் உயிர் பறிபோக, மகனை ஒழுக்கமாக வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்க விரும்புகிறார் அம்மா. அம்மாவின் விருப்பப்படி மகன் நன்றாகப் படிக்கிறான்.

ஒரு கட்டத்தில் குடிக்கிறான். அந்த குடி அவன் வாழ்வை எப்படியெல்லாம் கெடுத்தது, எந்த எல்லையில் கொண்டு நிறுத்தியது என்பதே படத்தின் கதை…படத்தை தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கிற ஜெயகிருஷ்ணா ஆரம்பக் காட்சிகளில் கல்லூரி மாணவன் பாத்திரத்துக்கு பொருந்தா விட்டாலும்… படிப்பைத் தொலைத்து, குடித்து அழித்து நோயாளியாகி, காலை இழந்து, கடைசிகட்ட வாழ்வினை உடல்மொழியால் உரிய நடிப்பை தந்து பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். நாயகி சாந்தினி. பணக்கார வீட்டுப்பெண்ணான அவருக்கு வறுமைச்சூழலில் வாழ்கிற குடிநோயாளிகளின் மனைவிகள் அனுபவிக்கிற வலியை சமூகத்துக்கு உணர்த்தியிருக்கிறார்.

மகனுக்கே மது வாங்கிக் கொடுக்கும் நிலை வரும்போது கதறும் காட்சியில் டாஸ்மாக் மீது ஆவேசமாய் பாயும் ஈஸ்வரி ராவின் நடிப்பு ஆக்ரோஷம் கா.சத்தியராஜின் ஒளிப்பதிவு நிறைவு. என்.ஆர்.ரகுநந்தன் இசை அருமை. ஆலகாலம் – உருவாக்கத்தில் சில குறைகள் இருந்தாலும் சொல்ல வந்த கருத்தில் ஆழம் நிறைந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து