முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம் ரூ.6660-க்கு விற்பனை: புதிய உச்சம் தொட்டது ஒரு பவுன் தங்கம் விலை

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, தங்கம் புதிய உச்சம் தொட்டு ஒரு பவுன் தங்கம் விலை ரூ.53,280-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாற்றமின்றி  விற்பனை செய்யப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று விலை உயர்ந்துள்ளது. நேற்று கிராம் ஒன்றிற்கு ரூ. 45 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,660-க்கும்,  சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் ,  ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து