முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிஷ் ரெட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2024      விளையாட்டு
Akash-Chopra 2024-04-10

Source: provided

மும்பை : ஐ.பி.எல் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் முலம் 2 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

இதுவரை ஐ.பி.எல். தொடரில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத இவர் குறித்து தற்போது ரசிகர்கள் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நிதிஷ் ரெட்டி குறித்து இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பேசுகையில், \"ஐ.பி.எல். ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டவர் நிதிஷ் ரெட்டி. ஐதராபாத் அணியின் பேட்டிங் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்தபோது, 150 ரன்கள் எடுப்பதே சந்தேகமாக பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி அசத்திவிட்டார். 

இவர் கடந்த சீசன் வரை சி.எஸ்.கே. அணியின் நெட் பவுலராக செயல்பட்டவர். இன்று ஐதராபாத் அணியின் ஆட்ட நாயகன். ஐ.பி.எல். தொடரின் வரலாற்றில் இந்திய வீரர்களில் பினிஷர் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடலாம். அதன் காரணமாகவே பினிஷர்களுக்கு அதிக தொகை கொடுக்க ஐ.பி.எல். அணிகள் முன் வருவார்கள். ராகுல் திவேட்டியா, ஷிவம் துபே, ஷஷாங்க் சிங்,  ஆகியோரின் வரிசையில் இப்போது நிதிஷ் ரெட்டியையும் சேர்த்து கொள்ளலாம்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து