முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் வளர்ச்சி போய்விடும் : கோவை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-1 2024-04-12

Source: provided

கோவை : பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியும், தொழில் வளர்ச்சி போய்விடும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடும் நிதி நெருக்கடியிலும் பல மக்கள் நல, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தியை வரவேற்கிறேன். ராகுல் காந்தி அவர்களே வருக! புதிய இந்தியாவுக்கு விடுதலை விடியல் தருக! என அழைக்கிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள் என்ற அண்ணாவின் சொல்லின் வழியே அவர் மக்களுடன் நடந்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார். சமூக நீதியின் அம்சங்கள் கொண்ட அந்த தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் கதாநாயகன்.

எப்போதும் வெளிநாட்டு டூரில் இருக்கும் பிரதமர் மோடி, தற்போது தேர்தல் என்பதால் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி டூர் வருகிறார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் செய்த எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார். குடும்ப அரசியல், ஊழல் கட்சி என கூறி வருகிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தால் அதன் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார்.

கடும் நிதி நெருக்கடியிலும் பல மக்கள் நல, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இன்னும் எவ்வளவு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று நினைத்துப் பாருங்கள். ரூ.6,500 கோடி முதலீட்டுடன் கோவைக்கு வந்த ஒரு பெரிய நிறுவனத்தை மிரட்டி குஜராத்துக்கு மாற்றியது பா.ஜ.க. இதுதான் கோவை மீது பா.ஜ.க. வைத்துள்ள பாசம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்த பணம் பறிக்கப்பட்டது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியும், தொழில் வளர்ச்சி போய்விடும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து