முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை : பீகாரில் வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      இந்தியா
Tejaswi-Yadav

Source: provided

பாட்னா : பீகாரில் நிறைவேற்ற உள்ள 24 வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார். 

மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் இணைந்து போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பீகாரில் நிறைவேற்ற உள்ள வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக பாட்னாவில் வெளியிட்டுள்ளது. பெண்கள், இளைஞர்கள், வேலைவாய்ப்பை பயன்படுத்தி 24 வாக்குறுதிகளுடன் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை பத்திரம் என்ற தலைப்பில் அக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மூத்த தலைவர்களுடன் சேர்ந்து வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு விடுமுறை வழங்கப்படும். வேலை வாய்ப்பு வழங்கும் பணி ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கி விடும். மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு உட்படுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் ரக்சா பந்தனின் போது ஏழை சகோதரிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், சமையல் எரிவாயு விலை 500ஆக குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார்.  மாநிலத்தின் வளர்ச்சியின் அடிப்படையாக வைத்து முக்கிய பிரச்சனைகள் சார்ந்து வாக்குறுதிகளை அளித்திருப்பாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். 

அது மட்டுமின்றி பீகாரில் பர்ணியா, பகல்பூர், முஸாபர் நகர், கோபால் கஞ்ச் உள்ளிட்ட 5 நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்படும்.  200 யூனிட் இலவச மின்சாரம் 10 பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் போன்ற வாக்குறுதிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. 

மேலும் அக்னிவீர் திட்டம் ரத்து,  மண்டல் கமிஷன் மீதமுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தப்படும், பணியின் போது உயிரிழக்கும் துணை ராணுவ படையினருக்கு வீர மரணமடைந்தோருக்கான அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து