முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலும், ஈரானும் மோதலை கைவிட இந்தியா வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      உலகம்
UN-India 2024-03-16

Source: provided

புது டெல்லி : இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறும் போது, 

அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரிப்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவலை கொண்டுள்ளோம். உடனடியாக தீவிரத்தை குறைக்கவும், கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், வன்முறையில் இருந்து பின்வாங்கவும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவும் அழைப்பு விடுக்கிறோம்.

பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பேணப்படுவது இன்றியமையாதது. அங்கு நடந்து வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து