முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்ல முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து இடைக்கால பாதுகாப்பு அளிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடி பணிகளை கவனித்து வருகிறார்.

அத்துடன் கைது நடவடிக்கைக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலின் மனுவுக்கு வரும் 24-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு ஏப்ரல் 29-ல் தொடங்கும் வாரத்தில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலை மேலும் விசாரிக்கவேண்டியுள்ளதால் அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்கவேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்ற டெல்லி கோர்ட், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து