முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் மலையாள பட இசையமைப்பாளர் ஜெயன் காலமானார்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      சினிமா
Jeyan 2024-04-16

Source: provided

திருவனந்தபுரம் : பழம்பெரும் மலையாள சினிமா இசையமைப்பாளரும், பாடகரும், நடிகர் மனோஜ் கே.ஜெயனின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (90) நேற்று காலமானார். 

கடந்த 1968-ல் பூமியிலே மாலாகமார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கே.ஜி. ஜெயன். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தனது தம்பி விஜயனுடன் இணைந்து பின்னர் மலையாள பக்தி பாடல்களை பாட தொடங்கினார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கும் போது ஒலிபரப்பாகும் கோயில் நடை துறன்னு என்ற பாடலை இவரும், இவரது தம்பி விஜயனும் சேர்ந்து தான் இசையமைத்து பாடினர். 2 பேரும் சேர்ந்து ஏராளமான பக்தி இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளனர்.

அண்ணனும், தம்பியும் சேர்ந்துதான் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும்பாலான கோவில் விழாக்களில் பாடி வந்தனர். இவர்கள் இருவரும் கேரளாவில் ஜெய விஜய சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டு வந்தனர்.  

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கொச்சி திருப்பூணித்துறையில் உள்ள வீட்டில் கே.ஜி.ஜெயன் நேற்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராய் விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1991-ல் சங்கீத நாடக அகாடமி விருதும், 2013-ல் ஹரிவராசனம் விருதும் அவருக்கு கிடைத்தது. இவருக்கு மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மனோஜ் கே.ஜெயன் மற்றும் பிஜு கே.ஜெயன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து