முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம் : இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      உலகம்
Iran 2024-04-15

Source: provided

டெக்ரான் : இன்னொரு முறை இஸ்ரேல் தங்களை தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்,  தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது.

இதனிடையே ஏப். 14 அன்று இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஈரான் மற்றும் ஏமனில் இருந்து இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அனுப்பப்பட்ட 80 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் அழித்ததாக அமெரிக்க மத்திய படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அரசு இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதிலடிதான் இது. ஒரு பெரிய மோதலை நோக்கி இஸ்ரேல் முன்னேறுவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவது தான் இந்த பதிலடியின் நோக்கம். இந்த நோக்கத்தை நாங்கள் அடைந்துவிட்டோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் பதிலடி தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான 5 உறுப்பினர்களைக் கொண்ட போர் அமைச்சரவை கூட்டத்தில் பதிலடி கொடுக்க விரும்புவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் குழு அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கான  நேரம் மற்றும் அளவு குறைவு என்பதால் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டது.

முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில், “ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். பிரதமர் நெதன்யாகுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து