எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான இன்டியா கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
இதில், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரத்தில் இருந்து திசை திருப்பும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது என ராகுல் காந்தி கூறினார். அவரிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது. எனக்கு என்ன உத்தரவு வருகிறதோ, அதனை நான் பின்பற்றுவேன். எங்களுடைய கட்சியில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விசயங்கள் எல்லாம், காங்கிரஸ் தேர்வு குழுவினரால் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


