முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., 2021-ல் ஆட்சிப் பெறுப்பேற்ற பிறகு இந்த அரசு மீனவர் நலன்களுக்காக நிறைவேற்றிய முக்கியமான பணிகள் சில பின்வருமாறு.,

1. மீன்பிடிக்கச் சென்று இலங்கை அரசால் பிடிக்கப்பட்டு பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் 26 நாட்டு படகு உரிமையாளர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் என மொத்தம் ‘ரூ.6 கோடியே 84 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

2. மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.250 என்பது ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

3. காப்பீடு இல்லதாத காலத்தில் மீன் பிடிக்கச் சென்று உயிர் இழந்த 205 மீனவர் குடும்பங்களுக்கு விபத்து காப்பீடு நிவாரணத் தொகை தலா ரூபாய் 2 லட்சம் வீதம் 172 மீனவர்களின் குடும்பங்களுக்கும், நிரந்தர ஊனமடைந்த ஒரு மீனவருக்கு ரூ. 1 லட்சமும் ஆக ரூ. 3 கோடியே 45 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

4. 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் மீன்பிடிக்கச் சென்று விபத்தில் சிக்கி இறந்த குடும்பங்களுக்கு வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகை தலா ரூபாய் 2 லட்சம் வீதம் 25 மீனவ குடும்பங்களுக்கு 2023-இல் ரூபாய் 50 லட்சம் வழங்கப்பட்டது.

5. இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ராஜ்கிரண் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது.

6. இந்திய கடற்படை ரோந்து பணியின் போது துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்த 6 மீனவர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

7. அதேபோல, ரோந்து படை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர் திரு.வீரவேல் என்பவருக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

8. இந்தோனிசிய கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு 20.5.2022 அன்று சிறையில் மரணமடைந்த குமரி மாவட்ட மீனவர் திரு.ஜெசின்தாஸ் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

9. நாகை மாவட்டம் கீச்சாம் குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர் முகிந்தன் மீன்பிடிக்க சென்று படகு கவிழ்ந்து மூழ்கி உயிரிழந்தார் அவர் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

10. அதேபோல மஸ்கட் நாட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்தப்பொழுது கடலில் தவறி விழுந்து மரணமடைந்த குமரி மாவட்ட ஏழுதேசம் கிராமத்தை சேர்ந்த லிறன்ஷோ, என்பவர் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

11. தமிழ்நாடு மீனவ இளைஞர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான 6 மாத சிறப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சத்து 93 ஆயிரம் செலவில் 26 மீனவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

12. 2021-இல் இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 5 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவரை 3 அண்டுகளில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 230 மீனவ குடும்பங்களுக்கு 258 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

13. மீன்பிடி குறைவு காலத்திற்கான சிறப்பு உதவி தொகை ரூபாய் 5 ஆயிரம் என்பது ரூபாய் 6 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு 5 லட்சத்து 51 ஆயிரத்து 609 மீனவர் குடும்பங்களுக்கு ரூபாய் 331 கோடி வழங்கப்பட்டுள்ளது.

14.தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் 2022 – 2023 ஆம் ஆண்டு முதல் மாநில அரசு திட்டமாக ஏற்கப்பட்டு ரூபாய் 6 லட்சத்து 18 ஆயிரத்து 760 மீனவர்களுக்கு 187 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

15.தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூபாய் 191 கோடியே 6 லட்சத்து 92 ஆயிரம் மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

16. பாரம்பரிய மீன்பிடிக் கலன்களை இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் 3,591 வெளிப் பொருத்தும் இயந்திரங்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து