முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
Seeman 2024-03-22

Source: provided

சென்னை :  'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கொரட்டூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: 10 ஆண்டுகளில் செய்த சாதனை என்ன? என்று பா.ஜ., வால் கூற முடியுமா?. மாநில உரிமை பேசிய திமுக கட்சி இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என்று போய்விட்டது. சூரியன் சின்னத்தில் ஓட்டு போடாவிட்டால் பெண்களுக்கு தரும் ரூ. ஆயிரத்தை நிறுத்திவிடுவோம் என திமுக கூறுகிறது. இது ஒரு கட்சி. இதுக்கு ஒரு தலைவர் அதுக்கு திராவிட மாடல் என்று வேற, ஐயோ.

தமிழர்கள் எவரையும் மற்ற மாநிலத்தவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை. நீ மட்டும் ஏன் யார் வந்தாலும் தலைவன் என்கிறாய்?. வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்.

இதில் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்கின்றனர்; விழித்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வே விடுதலையின் முதல்படி. எனக்கும் தன்னலம் உண்டு. என் இனத்தின் நலன் தான் என் தன்னலம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து