முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      விளையாட்டு
Joss-Butler 2024-04-17

Source: provided

ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி

31-வது லீக் ஆட்டம்...

ஐபிஎல் போட்டியின் 31-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வென்றது. ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் பேசியதாவது...

வரலாற்றில் பலமுறை... 

நம்பிக்கை மட்டும்தான் இன்றைய ஒரே வழி. ஆரம்பத்தில் நான் சரியான ரிதம் கிடைக்காமல் தடுமாறினேன். பரவாயில்லை. அமைதியாக இரு; நிச்சயமாக ரிதம் கிடைக்கும் என நான் எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன். ஐபிஎல் வரலாற்றில் பலமுறை இதுபோல நடந்திருக்கிறது.

நம்பிக்கையுடன்.... 

டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன். அவர்கள் பலமுறை ஐபிஎல்-இல் இதைச் செய்திருக்கிறார்கள். நான் அதையே இன்றும் செய்ய நினைத்தேன். பயிற்சியாளர் குமார் சங்ககாரா இதைத்தான் சொல்லுவார். களத்தில் இருக்க வேண்டும். எதாவது ஒரு புள்ளியில் போட்டி மாறும். ஒரு ஷாட் மூலமாக நமக்கு ரிதம் கிடைக்கலாம் எனக் கூறுவார். அதுதான் நடந்தது. இந்த வெற்றி எனக்கு மிகவும் மன நிறைவாக இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து