முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      விளையாட்டு
Rajasthan-team 2024-03-29

Source: provided

ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.

பத்து அணிகள்...

17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில், சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

பந்துவீச்சு தேர்வு...

இந்நிலையில், 31வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதனைத்தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் முதலில் களமிறங்கினர்.

11 ரன்னில் அவுட்... 

4வது ஓவரில் 10 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் பில் சால்ட் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆங்க்ரீஷ் ரகுவன்ஷி 30 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து நரேனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரசேல் களமிறங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த நரேன் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதையடுத்து ரிங்கு சிங் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தனர்.

224 ரன்கள் இலக்கு...

20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  இதையடுத்து, அதிகபட்சமாக சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இதன்மூலம் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது.  ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் முதலில் களமிறங்கினர்.ஜெய்ஸ்வால், 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய துருவ் ஜுரேல் (2), அஷ்வின் (8), ஹெட்மயர் (0) ஆகியோர் அடுத்தத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

9 ரன்கள் தேவை...

கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியில் வெற்றிக்கு  தேவைப்பட்டது. பட்லர் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். 55 பந்துகளில் சதம் கடந்தார். இருந்தும் அடுத்த 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் மூலம் இரு அணியின் ரன்களும் சமன் ஆனது. கடைசி பந்தில் 1 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் வெற்றி....

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு தனது இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. 224 ரன்களை விளாசிய ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா தரப்பில் ரானா, வருண். நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 107 ரன்களை விளாசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து