முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      உலகம்
China--new-train-station-20

பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மரக்கூரைகள் மற்றும் ஜன்னல் வடிவங்கள் போன்ற பாரம்பரிய சீன கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு நவீனத்துவம் கலந்து இந்த ரயில் நிலைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

இந்திய மதிப்பில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள இந்த ரயில் நிலையம் சீன கட்டிடக் கலையின் தனித்துவத்தை பின்பற்றும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது. 

இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். பிளம் மலர்களால் ஈர்க்கப்பட்டு இந்த ரயில் நிலையத்தின் வடிவமைப்பு இருப்பதாக சிலர் பதிவிட்டனர். 

அதே நேரம் இந்த ரயில் நிலையத்தின் தோற்றம் ராட்சத சானிட்டரி பேட் போல தெரிகிறது. இந்த வடிவமைப்பை பிளம் பிளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து