முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      உலகம்
Pak 2024-04-19

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியும், மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பினர்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க போராடும் சிலர், கடந்த சில ஆண்டுகளாக சீனர்கள் போன்ற வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

உயிர் பிழைத்த ஜப்பானியர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து