முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      இந்தியா
Nagpur-Lady 2024-04-19

நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.

நாடு முழுவதும் நேற்று 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடந்தது.  இதில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு சென்று  தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். 

அந்த வகையில் மகராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், நாக்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் உலகிலேயே குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி வாக்களித்தார். இவரது உயரம் 2 அடி 6 அங்குலம் மட்டுமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து