முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      இந்தியா
Cong 2024-04-19

பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

கட்டேதார் கலபுரகி மாவட்டத்தின் அப்ஜல்புர் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ.-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சரும் ஆவார். 

கலபுரகி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் சொந்த மாவட்டம் ஆகும். கார்கே 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். 

கார்கேயின் மருமகன் ராதாகிருஷ்ணா டோட்டாமணி கலபுரகி (குல்பர்கா) தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த மாதம் தொடக்கத்தில் கட்டேதார் சகோதரர் நிதின் வெங்கையா கட்டேதார் பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால் மலிகய்யா கட்டேதார் அதிருப்தி அடைந்தார். 

இந்த நிலையில் பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அப்ஜல்புர் தொகுதியில் எம்.ஒய். பாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

மலிகய்யா கட்டேதார் 3-வது இடம் பிடித்தார். அவரது சகோதரர் நிதின் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார். மலிகாய்யா முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது சகோதரர் பா.ஜ.க.வில் இணைந்த விவகாரத்தில் பா.ஜ.க  மூத்த தலைவர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரை விமர்சித்திருந்தார்.

கார்கேயின் மகனும், கர்நாடகா மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, கட்டேதார் காங்கிரஸ் கட்சியில் இணைய முக்கிய காரணமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது. 

சாரதா மோகன் ஷெட்டி உத்தாரா கன்னடா மாவட்டத்தின் கும்தா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 2013 மற்றும் 2018-ல் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலின் போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜ.க.வில் இணைந்தார். கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிரியங்க் கார்கே ஆகியோர் இருவரையும் வரவேற்றுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து