முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
Ve-kaivayal 2023-05-06

Source: provided

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி நேரில் வந்தும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) மா. சின்னதுரை ஆகியோர் அங்குள்ள பிரமுகர்களுடன் தொலைபேசி மூலமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக புறக்கணிப்பு கைவிடப்பட்டு வாக்குச்சாவடிக்கு வந்தனர். சிறிதுநேரம் சிறப்பு நேரம் வழங்கப்பட்டு இங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் வேங்கைவயல் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து