முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      உலகம்
Kenya 2024-04-20

நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள். 

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் பதற்றமான பகுதியை கண்காணிக்க ராணுவ தளபதி உள்பட பலர் ஹெலிகாப்டரில் சென்றனர். ஆனால் அந்த ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் மூத்த ராணுவ தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா உள்பட 11 ராணுவ வீரர்கள் பலியாகினர். 

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அதிபர் வில்லியம் ரூடோ, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு உள்பட பலர் இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் 3 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும் அதிபர் வில்லியம் ரூடோ கூறினார். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து