முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      தமிழகம்
Radhakrishnan 2023 04 17

Source: provided

சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சென்னையில் குறைந்த அளவு வாக்குப்பதிவாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: 

ஓட்டுப் போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் அதிகமான ஓட்டுப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்து இருந்தால், இந்த ஓட்டுப்பதிவு சதவீதமும் வந்து இருக்காது. வெயிலின் காரணமாக பகலுக்குப் பிறகு வாக்காளர்கள் இடையே சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.

அதே போல், அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பலரும் ஓட்டுப் போட வருவதற்கான முயற்சிகளை எடுக்க தயங்குகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிகளவு ஓட்டுப்பதிவை மேற்கொள்ள மண்டல அளவிலான அதிகாரிகள் மூலமாக நாங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டோம். 

தொடர் விழிப்புணர்வு மூலம் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து