முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மே 3-ம் தேதி யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024      விளையாட்டு
3

Source: provided

சென்னை:சென்னை நகரத்துக்குட்பட்ட யு-12 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் மே 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ‘பி’ மைதானத்தில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

சென்னையை இருப்பிடமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வீரர்கள் 2012-ம் ஆண்டு செப்படம்பர் 1-ம் தேதி அன்று அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாகவும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் சென்று பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு தொடங்கியது. வரும் 26-ம் தேதி மாலை 6 மணி வரை வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். வீரர்களின் விவரங்களை சரிபார்த்த பின்னர் அவர்கள் தேர்வில் கலந்து கொள்வதற்கான தகவல் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து