முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்டிடேட் செஸ்; 13வது சுற்றில் வெற்றி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய குகேஷ்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024      விளையாட்டு
6

Source: provided

டொராண்டோ:உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று நேற்று நடைபெற்றது.

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இந்த சுற்றில் பிரான்சின் அலிரெஸா பிரூஸ்ஜாவை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 8.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவின் பேபியானோ கருவானாவிடம் தோல்வி கண்டார்.மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பைஜானின் நிஜாத் அபசோவ் உடன் டிரா செய்தார். 13 சுற்று முடிவில் இந்திய வீரர் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.  

2 முதல் 4 இடங்களில் முறையே ரஷியாவின் இயன் நேபோம்னியாச்சி (8 புள்ளி), அமெரிக்காவின் ஹிகாரு நகாமுரா (8 புள்ளி), அமெரிக்காவின் பேபியானோ கருவானா (8 புள்ளி) உள்ளனர்.இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா  6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், குஜராத்தி 5.5 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர். 14வது சுற்றில் வெற்றி பெற்றால் கேன்டிடேட் செஸ் தொடரை குகேஷ் கைப்பற்றுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து