முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்;பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர் விலகல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024      விளையாட்டு
7

Source: provided

கராச்சி:நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-0 என பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர் அசாம் கான் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கபட்டுள்ளது.அசாம் கான் தனது வலது கால் தசையில் கிரேடு ஒன் காயத்தை அவர் சந்தித்ததால்  நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து