முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
NIA 2024-04-06

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர். 

பயங்கரவாதிகளுடன் தொடர்பு, பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள கலம்தான் போராவை சேர்ந்த முகாமில் ஷபி கான் (25) என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் ரெவ்லான் இந்தியா என்ற அழகு சாதன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மேலும் ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஊழியரான முஷ்டாக் அகமது தார் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர மேலும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

இது தொடர்பாக ஏற்கனவே மத்திய படை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையில் துணை ராணுவத்தினர், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து