எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விஷால் சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “வரும் 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன். இந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் இத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு என்பதை யோசிக்க கூடாது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று யோசித்தால் அதற்காக மட்டும் தான் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவோம்.
கிராமப்புறங்களில் மக்களுக்கான நலதிட்டங்கள் முழுமையாக கிடைப்பது இல்லை. திமுக, அதிமுக செயல்பாடு என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால், என்னை போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம். மேலும், புதிதாக கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்ட மாட்டோம் என்றார்.
மேலும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் விஷால் கூறியதாவது : நடிகர் சங்க பொதுக்குழுவில் மட்டும் தான் முடிவெடுக்க முடியும். முக்கிய நிர்வாகிகள் உள்ளனர் அவர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


