முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசவாதி விமர்சனம்

திங்கட்கிழமை, 13 மே 2024      சினிமா
Racaveti-Review 2024-05-13

Source: provided

நாயகன் அர்ஜுன் தாஸ், சித்த மருத்துவர் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்கு வருகிறார். அங்கிருக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு, இயற்கை மற்றும் உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அங்கிருக்கும் தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றும் நாயகி தான்யா ரவிசந்திரனுக்கும், அர்ஜுனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்கிறது.

இதற்கிடையே, கொடைக்கானலுக்கு பணி மாற்றம் பெற்று வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கர், அர்ஜுன் தாஸை கண்டதும் கோபடமடைவதோடு, அவரது அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். தன் மீது சுஜித் எதற்காக வன்மத்தை கக்குகிறார் என்று புரியாமல் குழம்பும் அர்ஜுன், அவர் என்னதான் தனக்கு தீமை செய்தாலும் அதற்கு எதிர்விணை காட்டாமல் ஒதுங்கி செல்லவே முயற்சிக்க, சுஜித் அர்ஜுனை விடுவதாக இல்லை. இப்படியே தொடரும் அவரடைய வன்மன், அர்ஜுனின் வாழ்க்கையை என்ன செய்தது?, சுஜின் அர்ஜுன் மீது வன்மம் கொள்ள காரணம் என்ன?, அர்ஜுன் மறக்க நினைக்கும் அவரது கடந்தகால வாழ்க்கை என்ன? என்பதை காதலையும், சமூக வாழ்க்கையையும் சேர்த்து சொல்வது தான் ‘ரசவாதி’.

ஒரு சாதாரண காதல் கதை தான் என்றாலும், அதை வைத்துக்கொண்டு இயக்குநர் சாந்தகுமார் பேசியிருக்கும் விசயங்கள் அனைத்தும், சுவாரஸ்யமாக மட்டும் இன்றி சமூகத்திற்கு தேவையானவையாகவும் இருக்கிறது. நாயகன் மட்டும் இன்றி வில்லன் கதாபாத்திரன் மூலம் கூட சில வாழ்க்கை தத்துவங்களை சொல்லும் வசனங்கள் அனைத்தும் கைதட்டல் பெறுகிறது. மொத்தத்தில் இந்த ரசவாதி.

 நாயகன் அர்ஜுன் தாஸ்க்கு ஒரு புதிய பயணம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து