முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      உலகம்
KIM 2023 03 15

Source: provided

பியாங்கியாங் :  தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. 

வடகொரியாவில் அவ்வப்போது அமல்படுத்தப்படும் வினோத தடைகள் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பெண்கள் பூசிக் கொள்ள அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

பிரபலமான அலங்கார பொருட்களுக்கு ஏற்கனவே அதிபர் தடை விதித்தார். தற்போது சிவப்பு நிற உதட்டு சாயத்திற்கும் தடை விதித்ததோடு இந்த தடையை மீறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

சிவப்பு வண்ணம் கம்யூனிசத்தின் ஆஸ்தான நிறமாக பார்க்கப்பட்டாலும் பெண்கள் பூசிக் கொள்ளும் உதட்டு சாயத்தை முதலாளித்துவத்தின் சின்னமாக வடகொரியா அதிபர் பார்ப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து