முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

துணை கேப்டனாக... 

20 அணிகள் கலந்து கொள்ளும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கேப்டன்...

இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற சீனியர் வீரர்களும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது.

திட்டம் இல்லை...

இது ஒருபுறம் ரோகித் சர்மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த வேளையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பாண்ட்யாவின் செயல்பாடு சிறப்பாக இல்லாததால் அவரை டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கும் திட்டம் ரோகித் சர்மா, அஜித் அகர்கரிடம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றதோடு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். 

ஓய்வு பெற திட்டம்...

இந்த முடிவாலும், டி20 போட்டிகளில் சமீபத்திய பார்ம் காரணமாகவும் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய பின்னர் ரோகித் சர்மா டி20  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து