முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
AAP 2024-05-19

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ம் தேதி காலை டெல்லி முதல்வர்  கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்ற போது  கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டி இதுதொடர்பாக டெல்லி போலீசிலும் புகார் அளித்தார். 

இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் டெல்லி முதல்வர்  கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரும், மாலிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், கெஜ்ரிவாலின் அறிவிப்பின்படி பா.ஜ.க. தலைமை அலுவலகம் நோக்கி நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர்.  ஆனால், முற்றுகை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்துவது பற்றி கெஜ்ரிவால் கூறும் போது, 

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை சிறைக்கு அனுப்பும் விளையாட்டை பிரதமர் மோடி ஆடி கொண்டிருக்கிறார்.

அவர்கள் எங்களுடைய கட்சியின் பின்னாலேயே வருகின்றனர். எங்களுடைய தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர். என்னுடைய தனி உதவியாளரை (பிபவ் குமார்) சிறைக்கு அனுப்பி விட்டனர் என கூறினார். 

மேலும் ஆம் ஆத்மியின் எம்.பி. ராகவ் சத்தா மற்றும் டெல்லி அமைச்சர்களான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோரையும் சிறைக்கு அனுப்பி விடுவோம் என பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். 

இந்நிலையில், தடையை மீறி ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவாலை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து